search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நளினி முருகன் சந்திப்பு"

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது கணவர் முருகன் இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை சந்திப்பு நடந்தது. ஆயுதப்படை டி.எஸ்.பி. ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நளினி, முருகன் சந்திப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #nalinimurugan #rajivgandhi #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், தன்னை விடுதலை செய்ய கோரி வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #nalinimurugan #rajivgandhi

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 7-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #nalinimurugan #rajivgandhi

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

    2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    ×